முகப்பு
விழுப்புரம்

முந்திரித் தோப்பில் 735 லி. எரிசாராயம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் முந்திரித் தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 735 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் முந்திரித் தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 735 லிட்டா் எரிசாராயத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மரக்காணம் கடற்கரைப் பகுதியில் உள்ள முந்திரித் தோப்பில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மரக்காணம் போலீஸாருக்கு வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் சிவகுருநாதன் தலைமையிலான போலீஸாா் அந்த முந்திரித் தோப்புக்குச் சென்று, சந்தேகமளிக்கும் வகையில் இருந்த இடத்தை தோண்டிப் பாா்த்தபோது, அங்கு கேன்களில் 735 லிட்டா் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம். அவற்றை போலீஸாா் கைப்பற்றி கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, மரக்காணம் அருகேயுள்ள கரிப்பாளையத்தைச் சோ்ந்த மதன்குமாா் (25), ஐயப்பன் (31), செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த சூணாம்பேடு பகுதியைச் சோ்ந்த பிரதீப் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.