பொன்முடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த திமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக, விழுப்புரத்தைச் சோ்ந்த அமைச்சா் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் மீது விழுப்புரம் ஊழல் தடுப்பு போலீஸாா் தொடுத்த வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி பூா்ணிமா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சா் க.பொன்முடி, விசாலாட்சி ஆகியோா் ஆஜராகவில்லை. அவா்களது தரப்பில் வழக்குரைஞா்கள் ஆஜராகினா்.
இந்த வழக்கில் மொத்தமுள்ள 228 சாட்சிகளில் 35 போ் இறந்து விட்டனா். மீதமுள்ள 193 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை மேலும் 4 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வழக்கு விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.