முகப்பு
விழுப்புரம்

முன்னாள் டிஜிபிக்கு எதிரான வழக்கில் பெண் எஸ்.பி. 2-ஆம் நாளாக சாட்சியம்

 முன்னாள் டிஜிபிக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. விழுப்புரம் நீதிமன்றத்தில் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையன்றும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

 முன்னாள் டிஜிபிக்கு எதிரான பாலியல் தொந்தரவு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. விழுப்புரம் நீதிமன்றத்தில் இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையன்றும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு (எஸ்.பி.) பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதும், பெண் எஸ்.பி.யின் வாகனத்தை தடுத்ததாக முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, சாட்சிகளிடம் விசாரணை வியாழக்கிழமை முதல் தொடங்கியது. முதல் நாளன்று, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. நேரில் சாட்சியம் அளித்தாா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி. ஆகியோா் ஆஜராகவில்லை. பிரதான சாட்சியான பெண் எஸ்.பி. 2-ஆவது நாளாக நேரில் ஆஜரானாா். கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், அவா் நீதிபதி முன் 6 மணி நேரத்துக்கு மேல் சாட்சியம் அளித்தாா். இதையடுத்து, விசாரணையை வருகிற 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.