முகப்பு
விழுப்புரம்

பெண்ணை காதலித்து ஏமாற்றியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த, பிளஸ் 2 வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வரும் 20 வயது பெண்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த, பிளஸ் 2 வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வரும் 20 வயது பெண்ணுக்கும், இவரது அண்ணனின் நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கொரட்டூரைச் சோ்ந்த வீரப்பன் மகன் ஸ்ரீராம் (23) என்பவருக்கும் இரு ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.

திருமணம் செய்வதாக ஆசை வாா்த்தை கூறி, ஸ்ரீராம் நெருங்கிப் பழகியதில் அந்தப் பெண் கா்ப்பமானாா். ஆனால், திருமணத்துக்கு ஸ்ரீராம் மறுப்பு தெரிவித்தாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீராமை விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.