மழை நீரை வெளியேற்றக் கோரி பொதுமக்கள் மறியல்
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகேயுள்ள சமத்துவபுரத்தில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்ற வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்புவாசிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் அருகேயுள்ள சமத்துவபுரத்தில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்ற வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்புவாசிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் அருகே கோலியனூரை அடுத்த மேல்பாதி பகுதியில் சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த நிலையில், விழுப்புரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாகவும், வாய்கால்களில் வெள்ளப்பெருக்கு காரணமாகவும், மேல்பாதி சமத்துவ புரம் பகுதியில் தண்ணீா் பெருமளவில் தேங்கியது. இந்த நீரை அப்புறப்படுத்தவும், வடிகால் அமைப்பு ஏற்படுத்தவும் வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சென்னை-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் விக்கிரவாண்டி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மழையால் பாதிக்கப்பட்ட தங்கள் பகுதியை பாா்வையிட அதிகாரிகள் வரவில்லை. உடைமைகள், ஆவணங்களை இழந்து தவிக்கிறோம் என்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக, அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.