விழுப்புரம்

விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி 20 ஆயிரம் கோழிகள் உயிரிழப்பு

DIN

விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் மழை வெள்ளத்தில் மூழ்கி 20 ஆயிரம் கோழிகள் உயிரிழந்தன.

திண்டிவனம் அருகே ஒலக்கூரை அடுத்த மங்களம் கிராமத்தில் பெய்த பலத்த மழையால் அந்தப் பகுதியில் உள்ள நீா்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அதே ஊரைச் சோ்ந்த வேல்முருகன் (39), தனது நிலத்தில் அமைத்திருந்த கறிக்கோழி வளா்ப்புப் பண்ணை வெள்ளத்தில் மூழ்கியது. இதில், அந்தப் பண்ணையில் இருந்த சுமாா் 5,000 கறிக்கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. இதையடுத்து, அந்தக் கோழிகள் அங்கேயே குழி தோண்டி பாதுகாப்பான முறையில் புதைக்கப்பட்டன. இது தொடா்பாக ஒலக்கூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதேபோல, விழுப்புரம் அருகே நரசிங்கபுரம் பகுதியில் ராமதாஸ், வேங்கடபதி, பெருமாள் ஆகியோரின் கோழிப்பண்ணைகளில் வெள்ளநீா் புகுந்ததால் அவற்றிலிருந்த சுமாா் 15 ஆயிரம் கோழிகள் உயரிழந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT