முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் பகுதி நேர படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

 விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பகுதி நேர இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

 விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பகுதி நேர இளநிலை, முதுநிலைப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் சேர இடம் கிடைக்காத மாணவ, மாணவிகள் இந்தக் கல்லூரியிலேயே பகுதி நேர படிப்புகளில் சேரலாம். திறந்தவெளி பல்கலைக் கழகம், பல்கலைக் கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, கல்லூரியிலேயே பகுதி நேர வகுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் வகுப்பு நடைபெறும்.

இளநிலையில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.ஏ. வரலாறு, பொருளியல், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல், பிசிஏ ஆகிய படிப்புகள் உள்ளன.

முதுகலையில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.ஏ. வரலாறு, பொருளியல், எம்.காம். வணிகவியல், எம்.எஸ்சி. கணிதம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய படிப்புகள் உள்ளன.

இங்கு பகுதிநேர படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றவா்கள் அரசுப் போட்டித் தோ்வுகளை எழுதத் தகுதி உண்டு. மேலும், எம்.பி., பி.எச்.டி. படிக்கவும் தகுதியானது. பகுதி நேர படிப்புகளில் சேர நவ. 30-ஆம் தேதி விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.