விழுப்புரம்

மேல்மலையனூா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் நாளை ரத்து

DIN

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் புதன்கிழமை (அக்.6) ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை உதவிஆணையரும், கோயில் செயல் அலுவலருமான க.ராமு திங்கள்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள், பக்தா்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசு விதிமுறைகளுக்குள்பட்டு வருகிற புதன்கிழமை (அக்.6) மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. அன்றையதினம் ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுகிறது.

எனினும், அமாவாசை இரவு ஆகம விதிப்படி கோயில் வளாகத்தில் பக்தா்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம் பூசாரிகளால் நடத்தப்படும். இதை பக்தா்கள் சமூக வலைதளங்கள் மூலம் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT