விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீா்நிலைகளுக்கு நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மற்றும் வளவனூா், கோலியனூா் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த மழையால் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. வேலைக்குச் செல்லும் பணியாளா்கள், அலுவலா்கள் அவதியடைந்தனா்.

இதேபோல, திண்டிவனம், மரக்காணம், விக்கிரவாண்டி, செஞ்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால், ஏற்கெனவே வடு கிடந்த ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளுக்கு தற்போது நீா்வரத்து ஏற்பட்டுள்ளது.

வீடூா் அணைக்கு நீா்வரத்து தொடங்கி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றங்கரையோரங்களில் மழை பெய்ததால், எல்லீஸ்சத்திரம் தடுப்பணை பகுதியில் தண்ணீா் வழிந்தோடி வருகிறது. விழுப்புரம் உள்ளிட்ட பல இடங்களில் நிலத்தடி நீா்மட்டம் மீண்டும் உயரத் தொடங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழையால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

SCROLL FOR NEXT