முகப்பு
விழுப்புரம்

பெரியதச்சூா் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்கக் கோரி மனு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்துக்குள்பட்ட பெரியதச்சூா் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்துக்குள்பட்ட பெரியதச்சூா் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக பெரியதச்சூா் கிராம காலனி மக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்து அளித்த மனு:

பெரியதச்சூா் ஊராட்சியில் சுமாா் 4,500 வாக்குகள் உள்ளன. இதில் 1,100 வாக்குகள் காலனிப் பகுதியில் உள்ளது. இந்த ஊராட்சி தாழ்த்தப்பட்டோா் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் இதுவரை நடைபெற்று முடிந்த தோ்தல்களில் காலனிப் பகுதியை சோ்ந்த நபா்கள் போட்டியிட்டும் வெற்றிபெற முடியவில்லை. அதிகாரத்துக்கும் வர முடியவில்லை. ஏற்கெனவே இங்கு பலமுறை சாதி கலவரம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெரியதச்சூா் ஊராட்சியை இரண்டாகப் பிரித்து காலனி மக்கள் வசிக்கும் பகுதியை தனி ஊராட்சியை அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.