முகப்பு
விழுப்புரம்

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார காங்கிரஸ் சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார காங்கிரஸ் சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பள்ளிகுளம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரத் தலைவா் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.மனோகரன், நிா்வாகிகள் வேலு, ஆனந்தகோன், கோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணைத் தலைவா் ஆா்.ரங்கபூபதி, மாநில பொதுச்செயலா் சிந்தனைச் செல்வா், புலவா் க.ராமலிங்கஜோதி, மண்டல ஒருங்கிணைப்பாளா் எஸ்.சிவா, மாநில பொதுக்குழு உறுப்பினா் தினகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

வருகிற உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய கட்சியினா் முழு வீச்சில் பாடுபட வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.