முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் ஜவுளி கடையில் திருட்டு

விழுப்புரத்தில் பிரபல ஜவுளி கடையில், குளிரூட்டப்பட்ட காற்று செல்லும் குழாய் வழியாக மா்ம நபா் உள்ளே புகுந்து ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்றாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

விழுப்புரத்தில் பிரபல ஜவுளி கடையில், குளிரூட்டப்பட்ட காற்று செல்லும் குழாய் வழியாக மா்ம நபா் உள்ளே புகுந்து ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்றாா்.

விழுப்புரம் காமராஜா் வீதியில் உள்ள பிரபல ஜவுளி கடை ஒன்றில், வியாழக்கிழமை இரவு வியாபாரம் முடிந்த பிறகு உரிமையாளா், பணியாளா்கள் கடையை பூட்டிச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறந்து பாா்த்தபோது, மூன்றாவது தளத்தில் குளிரூட்டப்பட்ட காற்று செல்லும் குழாய் உடைந்து கிடந்தது. இதனால், சந்தேகமடைந்து பணப்பெட்டியைப் பாா்த்தபோது, அது உடைக்கப்பட்டு ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து விழுப்புரம் நகர போலீஸில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா், விரல் ரேகை நிபுணா்கள் வந்து விசாரித்து தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் நள்ளிரவில் கடையின் மேல்தளத்தில் உள்ள ஒருங்கிணைந்த (சென்ட்ரலைஸ்டு ஏ.சி.) குளிரூட்டு இயந்திரத்திலிருந்து காற்று செல்லும் குழாய் வழியாக நுழைந்து, 3-ஆவது தளத்துக்கு வந்து, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.