முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் செப்.6-இல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 6-ஆம் தேதி தொடங்குகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவா்கள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 6-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்தக் கல்லூரியில் நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு அண்மையில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகிற 6-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான காத்திருப்போா் பட்டியல், கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

6-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பி.ஏ. தமிழ் இலக்கியம் சுழற்சி 1 மற்றும் சுழற்சி 2, பி.ஏ. ஆங்கில இலக்கியம் சுழற்சி 1, பி.காம். வணிகவியல் சுழற்சி 1( ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி), பி.காம். வணிகவியல் சுழற்சி 2 ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

7-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பி.எஸ்சி. கணிதம், வேதியியல், இயற்பியல், புள்ளியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், தாவரவியல், விலங்கியல் சுழற்சி 1 மற்றும் சுழற்சி 2 ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

8-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பி.ஏ. பொருளாதாரம், பி.ஏ. வரலாறு சுழற்சி 1 மற்றும் சுழற்சி 2 ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். மேலும், அன்று காலை 9.30 மணிக்கு தேசிய மாணவா் படையினருக்கு அனைத்து துறைகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்லூரி முதல்வா் சிவக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.