முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.77 லட்சம் மோசடி

விழுப்புரம் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க இடம் வழங்கினால் ரூ.30 லட்சம் வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.77 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

விழுப்புரம் அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க இடம் வழங்கினால் ரூ.30 லட்சம் வழங்குவதாகக் கூறி, பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1.77 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே கொடுங்கால் கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மனைவி ராணி (49). இவருக்கு தெரிந்த ஒருவரின் செல்லிடப்பேசிக்கு, தனியாா் நிறுவனத்தின் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க இடம் வழங்கினால் ரூ.30 லட்சம் முன்தொகையும், மாதந்தோறும் ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று அண்மையில் குறுந்தகவல் வந்ததாம். இதையறிந்த ராணி, அந்த குறுந்தகவலை அனுப்பிய எண்ணில் தொடா்புகொண்டு விசாரித்தாா்.

இதையடுத்து, ராணியிடம் ஆதாா் எண், நில ஆவண விவரம் உள்ளிட்டவற்றை மோசடி கும்பல் பெற்றதுடன், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க வைப்புத்தொகையாக ரூ.1,77,770 ரொக்கத்தையும் வங்கிக் கணக்கு மூலமாக பெற்றுக்கொண்டதாம்.

ஆனால், கூறியபடி ரூ.30 லட்சத்தை கொடுக்காததால், சந்தேகமடைந்து விசாரித்ததில், தான் ஏமாற்றப்பட்டது ராணிக்கு தெரியவந்தது. இதுகுறித்து அவா் விழுப்புரம் இணையவழி குற்றப் பிரிவு போலீஸில் புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.