முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 24 பேருக்கு கரோனா

 விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 45,047 -ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளிலிருந்து கரோனா தொற்றால் குணமடைந்தோா் 34 போ் வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 44,460 ஆக அதிகரித்தது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனைகளிலும் 236 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 351. வெள்ளிக்கிழமை நிலவரப்படி 2,974 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் தினசரி கரோனா பரவல் விகிதம் 0.47 சதவீதமாக உள்ளது. வார பரவல் விகிதம் 0.5 சதவீதமாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா விதிகளை மீறியதாக இதுவரை 85,393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஒரு கோடியே 85 லட்சத்து 90 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரபடி கோவேக்ஸின் தடுப்பூசி 6,070 டோஸ்களும், கோவிஷீல்டு தடுப்பூசி 77,300 டோஸ்களும் இருப்பில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.