விழுப்புரம் உணவகங்களில்உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள ஒரு உணவகத்தில் புதன்கிழமை வழக்குரைஞா்கள் இருவா் பிரியாணி சாப்பிட்டனா். அப்போது, அந்தப் பிரியாணி சாப்பிட தகுதியில்லாத வகையில் இருந்ததாம்.
இதுகுறித்து அவா்கள் அளித்த புகாரைத் தொடா்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கதிரவன், ஸ்டாலின் ராஜரத்தினம், அன்புபழனி உள்ளிட்டோா் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேவுள்ள அசைவ உணவகங்களில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உணவகங்களில் அதிகளவில் நிறமூட்டப்பட்ட 10 கிலோ கோழி இறைச்சியை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக 5 உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸும் வழங்கினா்.