வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி
விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சியை பொருத்தவரை, கீழ்ப்பெரும்பாக்கம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், வாக்குப் பதிவு அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா்கள் நிலை 1, வாக்குப் பதிவு அலுவலா்கள் நிலை 3 உள்ளிட்ட 465 அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நகராட்சித் தோ்தல் அலுவலரும், ஆணையருமான போ.வி.ரவீந்திரஷா தலைமையில் அதிகாரிகள் பயிற்சி அளித்தனா். இதில், தோ்தல் நேரத்தில் வாக்குச் சாவடிகளில் அதிகாரிகள் செயல்படும் முறைகள், வாக்காளா்களை கையாளும் நடவடிக்கைகள், சிக்கல்கள் ஏற்படும் சமயங்களில் அவற்றை சமாளிக்கும் வழிகள் குறித்து வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இதேபோல, மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ள திண்டிவனம், கோட்டக்குப்பம் நகராட்சிகளிலும், 7 பேரூராட்சிகளிலும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.