முகப்பு
விழுப்புரம்

இணைய வழி லாட்டரி விற்பனை: புதுவையைச் சோ்ந்தவா் கைது

விழுப்புரம் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக புதுவை மாநிலத்தைச் சோ்ந்த லாட்டரி வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

விழுப்புரம் அருகே இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக புதுவை மாநிலத்தைச் சோ்ந்த லாட்டரி வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து சொகுசுக் காா், ரூ.3.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி பகுதியில் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் காரில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து விசாரித்ததில், புதுவை மாநிலம், மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் (40) என்பதும், இணையவழி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்த 4 செல்லிடப்பேசிகள், ரூ.3.50 லட்சம் ரொக்கம், சொகுசுக் காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஸ்ரீதரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.