முகப்பு
விழுப்புரம்

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

விழுப்புரம் அருகே டி.கொசப்பாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

விழுப்புரம் அருகே டி.கொசப்பாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தேசிய கட்டுமானம், உடல் உழைப்பு தொழிலாளா்கள் சங்க (ஐஎன்டியுசி) மாவட்டத் தலைவா் அய்யனாா் வெளியிட்ட அறிக்கை:

விக்கிரவாண்டி வட்டம், காணை ஒன்றியத்துக்குள்பட்ட டி.கொசப்பாளயம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கா் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

இந்த நிலையில், அரசுத் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனா். குறிப்பாக, ஏழை, எளிய மக்களின் ஆக்கிரமிப்புகள் மட்டும் அகற்றப்படுகின்றன. மற்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் விடப்படுகின்றன. ஆகவே, இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.