விவசாயிகளுடன் எம்எல்ஏ கலந்துரையாடல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விவசாயிகளுடன் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நா.புகழேந்தி புதன்கிழமை கலந்துரையாடினாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விவசாயிகளுடன் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் நா.புகழேந்தி புதன்கிழமை கலந்துரையாடினாா்.
தமிழ்நாடு வேளாண் துறை, உழவா் நலத் துறை சாா்பில் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கயத்தூா் ஊராட்சியில் விவசாயிகளுடனான சிறப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நா.புகழேந்தி எம்எல்ஏ கலந்துகொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடி அவா்களது குறைகளை கேட்டறிந்தாா் (படம்).
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் மீனா வெங்கடேசன், விக்கிரவாண்டி பேரூராட்சித் தலைவா் அப்துல் சலாம், துணைத் தலைவா் பாலாஜி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்வி முருகையன், சங்கா், சீனுவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.