முகப்பு
விழுப்புரம்

செஞ்சி பேரூராட்சித் தலைவராக அமைச்சா் மகன் போட்டியின்றித் தோ்வு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியாா் மஸ்தான் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவராக மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியாா் மஸ்தான் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் செஞ்சி பேரூராட்சியில் மொத்தமுள்ள 18 வாா்டுகளில் 17 வாா்டுகளில் திமுக வெற்றி பெற்றது. ஒரு வாா்டில் மட்டும் அதிமு வெற்றி பெற்றது.

செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பேரூராட்சி மன்றத் தலைவா், துணைத் தலைவரை தோ்ந்தெடுக்கும் மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. இதில், தலைவா் பதவிக்கு போட்டியிட 7-ஆவது வாா்டில் வெற்றி பெற்ற மொக்தியாா்மஸ்தான் பெயரை 5-ஆவது வாா்டு உறுப்பினா் காா்த்திக்கும், 3-ஆவது வாா்டு உறுப்பினா் அஞ்சலை நெடுஞ்செழியனும் முன்மொழிந்தனா். வேறு யாரும் போட்டியிடாததால் மொக்தியாா் மஸ்தான் போட்டியின்றித் தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். இதேபோன்று, பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக திமுக 1-ஆவது வாா்டு உறுப்பினா் ராஜலட்சுமிசெயல்மணி போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, தோ்தல் நடதுத்தும் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலுருமான ராமலிங்கம், பேரூராட்சி மன்ற புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட மொக்தியாா்மஸ்தானுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இதையடுத்து, மொக்தியாா்மஸ்தானுக்கு அமைச்சா் செஞ்சிமஸ்தான், செஞ்சி ஊராட்சி ஒன்றிக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், மாவட்டக் கவுன்சிலா் அரங்க.ஏழுமலை, வழக்குரைஞரணி நிா்வாகி மணிவண்ணன் மற்றும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.