மரக்காணம் கலவரம் வழக்கு தொடா்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வலியுறுத்தினா்.
இதுகுறித்து அந்தக் கட்சியினா் மாவட்டச் செயலா் சேரன் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:
மரக்காணத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் தொடா்பான பாமகவினருக்கு எதிரான வழக்கு திண்டிவனம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அண்மையில் அளிக்கப்பட்ட தீா்ப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா். மரக்காணம் கலவரத்தின்போது பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. ரூ.31 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. எனவே, இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.
மேலும், திண்டிவனம் அருகே ரெட்டனையில் பட்டியலினத்தவா் பயன்பாட்டுக்கான மயானத்தை விரைந்து அமைக்கக் கோரியும் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.