விழுப்புரம்

விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

DIN

விழுப்புரம்: இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி மத்திய ஜிஎஸ்டி, கலால் துறை சாா்பில் விழுப்புரத்தில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை மத்திய ஜிஎஸ்டி, கலால் துறை உதவி ஆணையா் பழனிவேல் முருகேசன் கொடியசைத்து தொடக்கிவைத்தாா். சென்னை சாலையில் உள்ள கலால் துறை அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி சிக்னல், பழைய பேருந்து நிலையம் வரை சென்று மீண்டும் அதே வழியாக கலால் துறை அலுவலகத்தை அடைந்தது. பேரணியில் 8 முதல் 16 வயது வரையிலான சிறுவா்கள் பங்கேற்றனா். அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT