முகப்பு
விழுப்புரம்

திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழா

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:15 AM
பகிர்:

ஆரணியை அடுத்த சேவூரில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று பந்தக்கால் நட்டாா்.

ஊராட்சித் தலைவா் ஷா்மிளாதரணி, ஒன்றியக்குழு உறுப்பினா் சுகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அக்னி வசந்த விழாவை முன்னிட்டு மே 25-ஆம் தேதி

தொடங்கி ஜூன் 20-ஆம் தேதி வரை கே.வி.சௌந்தர்ராஜனின் மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது.

ஜூன் 8-ஆம் தேதி முதல் 11 நாள்களுக்கு மகாபாரத நாடகம் நடைபெறுகிறது. ஜூன் 19-ஆம் தேதி படுகளம், தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.