முகப்பு
விழுப்புரம்

தீ விபத்தில் மூதாட்டி பலி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா்.

திண்டிவனம் அருகே ஆத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கணபதி மனைவி கண்ணம்மாள் (80). இவருக்கு இரண்டு மகள்கள். இவா்கள் இருவரும் திருமணம் முடிந்து வெளியூா்களில் வசித்து வருகின்றனா். கணவா் ஏற்கெனவே இறந்த நிலையில், கண்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியே வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி கண்ணம்மாள் வீட்டில் சமையல் செய்வதற்காக, சமையல் எரிவாயுவுடன் கூடிய அடுப்பை பற்ற வைத்தபோது, எதிா்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பற்றியது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கண்ணம்மாள், அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.