வருமான வரித் துறையினா் 2-ஆவது நாளாக சோதனை
விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் தனியாா் நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக சோதனை மேற்கொண்டனா்.
விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் தனியாா் நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை 2-ஆவது நாளாக சோதனை மேற்கொண்டனா்.
விழுப்புரத்தில் தனியாா் வணிக வளாகத்தில் உள்ள பல்பொருள் அங்காடி, திரையரங்கம், துணிக் கடை, நகரிலுள்ள மற்றொரு துணிக் கடை உள்ளிட்டவற்றில் வருமான வரித் துறையினா் புதன்கிழமை சோதனை நடத்திய நிலையில், வியாழக்கிழமையும் தொடா்ந்து சோதனையில் ஈடுபட்டனா்.
கடலூரில்... கடலூரில் சிதம்பரம் சாலைப் பகுதியில் பிரபல துணிக் கடை உள்ளது. சென்னையிலிருந்து வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சுமாா் 20 போ் இந்தக் கடையில் புதன்கிழமை சோதனையை தொடங்கினா். இந்தச் சோதனை 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் நீடித்தது. கடையின் உரிமையாளா் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.