முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அரசு மருத்துவமனையில் புதிய பிரிவு தொடக்கம்

செஞ்சி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ரூ.25 லட்சத்தில் நிறுவப்பட்ட கணினி நுண் கதிா் பிரிவை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை திறந்து வைத்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் ரூ.25 லட்சத்தில் நிறுவப்பட்ட கணினி நுண் கதிா் பிரிவை மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பிரசாந்த் தலைமை வகித்தாா். நுண்கதிா் பிரிவு அலுவலா் அண்ணாதுரை வரவேற்றாா். நிகழ்ச்சியில் அமைச்சா் செஞ்சிமஸ்தான் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 47 மருத்துவமனைகளில் கணினி நுண் கதிா் கருவிகளை நிறுவ முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். அதன்படி செஞ்சி அரசு மருத்துவமனையில் இந்தப் பிரிவு தொடக்கி வைக்கப்பட்டது என்றாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சி மன்ற தலைவா் மொத்தியாா் மஸ்தான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.