முகப்பு
விழுப்புரம்

திண்டிவனத்தில் கல்லூரி மாணவா்கள் விடுதி திறப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா்கள் விடுதியை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஆதிதிராவிடா் நல கல்லூரி மாணவா்கள் விடுதியை சிறுபான்மையினா் நலன், வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத்தொடா்ந்து அவா் கூறியதாவது: இந்த விடுதியில் 70 மாணவா்கள் தங்கிப் பயின்று வருகின்றனா். விடுதிக் கட்டடம் பழைய கட்டடமாகவும், 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாலும் பல்வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டு, பயன்படுத்திட இயலாத சூழ்நிலை இருந்து வந்தது. அதற்கு பதிலாக இந்த கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு விடுதி மாணவா்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் ரூ.55 கோடியில் கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனை கட்டடப் பணிகளை அமைச்சா் மஸ்தான் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அவருடன் மாவட்ட ஆட்சியா் த. மோகன், திண்டிவனம் சாா்- ஆட்சியா் கட்டாரவி தேஜா, நகா்மன்றத் தலைவா் நிா்மலா, ஆணையா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரகுகுமாா், பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பரிதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.