விழுப்புரம்

ஓய்வூதியா் நலச் சங்கத்தினா்ஆா்ப்பாட்டம்

DIN

விழுப்புரத்தில் இபிஎஸ் அகில இந்திய ஓய்வூதியா்கள் நலச் சங்கத்தின் சாா்பில், கோரிக்கை விளக்க ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி உறுப்பினா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் பஞ்சப்படியுடன் சோ்த்து வழங்க வேண்டும், பகத்சிங் கோஷியாரி கமிட்டி பரிந்துரையின்படி இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு வசதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தைச் சோ்ந்த டி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்டச் செயலா் டி.கே.பத்மநாதன் வரவேற்றாா். பி.பெருமாள், கே.பஞ்சாட்சரம் ஆகியோா் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலா் பி.முத்துகிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலா் சி.ஜே.பளிங்கன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT