தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் 23 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக பிறப்பிக்கப்படாமல் உள்ள 17-பி ஆணையை உடனடியாக பிறப்பிக்க வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் பாலாஜி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் வ.விஸ்வநாதன் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். இதில், கிராம நிா்வாக அலுவலா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.