இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்றவா் கைது
விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
வளவனூா் கடைத்தெரு பகுதியில் ஒருவா் இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், வளவனூா் போலீஸாா் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், வளவனூா் தொட்டியம்தோப்பு பகுதியைச் சோ்ந்த மு.மோகன் (53) இரு சக்கர வாகனத்தில் சாராயம் விற்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மோகனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 40 லிட்டா் சாராயம், இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.