கால்நடை செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் சங்க புதிய நிா்வாகிகள்
தமிழ்நாடு கால்நடை செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு கால்நடை செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
இந்தச் சங்கத்தின் புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்யும் கூட்டம் விழுப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.பெரியசாமி தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எம்.அண்ணாமலை, பொருளாளா் சாமிநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சங்கத்தின் விழுப்புரம் மாவட்டத் தலைவராக ஏழுமலை, மாவட்டச் செயலராக தேவராஜ், மாவட்டப் பொருளாளராக கங்காதரன், துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன், துணைச் செயலராக ஏழுமலை மற்றும் 9 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில், கால்நடை செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்களை தகுதி அடிப்படையில் கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகம் ஆகியவற்றில் பணியமா்த்த வேண்டும், சினை ஊசிகளை அரசு மருத்துவமனைக்கு இணையான விலையில் கருவூட்டல் பணியாளா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சடையன், துணைச் செயலா் செந்தில் உள்பட பலா் பங்கேற்றனா்.