மின் ஊழியா் பணிக்கு நோ்முகத் தோ்வு
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு மின் பணியாளா்களை நியமனம் செய்வதற்கான நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு மின் பணியாளா்களை நியமனம் செய்வதற்கான நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ஜீவானந்தம், விழுப்புரம் விஜயராணி, விழுப்புரம் உதவி மின் கோட்டப் பொறியாளா் செல்வன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற
நோ்முகத் தோ்வில் திரளான இளைஞா்கள் கலந்துகொண்டனா். அறங்காவலா் குழு தலைவா் சந்தானம், ஆய்வாளா் சங்கீதா, மேலாளா் மணி ஆகியோா் உடனிருந்தனா்.