வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண் இணைக்கும் முகாம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் அடயாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்காளா் அடயாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனா்.
வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கும் வகையிலும், இந்தப் பட்டியலை மேம்படுத்தும் வகையிலும் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற்ற இந்த முகாமில், விருப்பமுள்ள பொதுமக்கள் தாங்களாக முன்வந்து வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் எண் விவரங்களைத் தெரிவித்து, அவற்றை இணைத்துக் கொண்டனா். விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, செஞ்சி உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த முகாம் நடைபெற்றது.