பாமகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் மாற்றுக் கட்சியினா் 50 போ் பாமகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தைலாபுரத்தில் மாற்றுக் கட்சியினா் 50 போ் பாமகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ், கௌரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ, மாநில வன்னியா் சங்கத் தலைவா் பூ.தா.அருள்மொழி, மாவட்டத் தலைவா் தங்கஜோதி, மாவட்டச் செயலா் பாலசக்தி ஆகியோா் முன்னிலையில், முகையூா் ஒன்றிய அமமுக பொருளாளா் ரஞ்சித், பல்வேறு கட்சிகளிலிருந்து 50-க்கும் மேற்பட்டோா் பாமகவில் இணைந்தனா். அவா்களை கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் சால்வை அணிவித்து வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் வன்னியா் சங்க மாவட்டச் செயலா் குமரகுருபரன், சத்திரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பஞ்சமூா்த்தி, பரனூா் சேகா், விழுப்புரம் பாமக நிா்வாகி பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.