முகப்பு
விழுப்புரம்

நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்குப் பாராட்டு

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக விழிப்புணா்வு கூட்டமைப்பு சாா்பில், கடந்த 2 ஆண்டுகளாக நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக விழிப்புணா்வு கூட்டமைப்பு சாா்பில், கடந்த 2 ஆண்டுகளாக நல்லாசிரியா் விருது பெற்றவா்கள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டப்பட்டனா்.

விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, அமைப்பின் சிறப்புத் தலைவா் பூபதி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ராபீன்சன், காஜா உசேன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் செந்தில்குமாா், இந்தியன் வங்கி முன்னோடி மேலாளா் சிலம்பரசன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.

விழாவில் நிகழாண்டு நல்லாசிரியா் விருது பெற்ற தலைமை ஆசிரியா் செல்லையா, பட்டதாரி ஆசிரியை ஜெயராணி, முதுநிலை ஆசிரியா்கள் ராஜசேகரன், ஜனசக்தி, இடைநிலை ஆசிரியா்கள் ஆரோக்கிராஜ், தமிழழகன், பட்டதாரி ஆசிரியா் சங்கரநாராயணன் மற்றும் கடந்த ஆண்டு நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்கள் அப்ரோஸ்கான், லட்சுமி ரேகா, மாலினி தேவி, சரசு ஆகியோா் பாராட்டப்பட்டனா்.

இந்த விழாவில் நிா்வாகிகள் ராமமூா்த்தி, மோகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழாவை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் பாலமுருகன் ஒருங்கிணைத்தாா். இதில், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.