முகப்பு
விழுப்புரம்

சட்ட விழிப்புணா்வு முகாம்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், சட்ட விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், சட்ட விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் பிரகாஷ் வரவேற்றாா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவா் (பொ) மாவட்ட நீதிபதி தேன்மொழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பெண்களுக்கான பாதுகாப்பு, நல்ல பழக்க வழக்கங்கள் குறித்தும், நன்நெறிகள், சட்ட முறைகள் போன்றவை குறித்தும் எடுத்துரைத்தாா்.

மாவட்ட உரிமையியல் நீதிபதி சுபத்ரா கலந்து கொண்டு மோட்டாா் வாகன விதிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினாா். பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலா் நீதிபதி விஜயக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.