காங்கியனூா் ஏரிக்கரையில் பனை விதைகள் நடும் பணி
விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள காங்கியனூா் ஏரிக் கரையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாா்பில் பனை விதைகள் அண்மையில் நடப்பட்டன.
விழுப்புரத்தை அடுத்த காணை அருகே உள்ள காங்கியனூா் ஏரிக் கரையில் அரசுப் பள்ளி மாணவா்கள் சாா்பில் பனை விதைகள் அண்மையில் நடப்பட்டன.
காங்கியனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஜெ.ஆா்.சி. அமைப்பு, ‘பசுமை பழகுவோம்’ அமைப்பினா் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் இந்தப் பள்ளி மாணவா்கள் பங்கேற்று 1,000 பனை விதைகளை காங்கியனூா் ஏரிக்கரை, பொன்னங்குப்பம் சாலை ஓரத்தில் நட்டனா். ஆசிரியா் பி.மரிய ஜோசப் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்றத் தலைவா் நெடுஞ்செழியன் பனை விதைகள் நடும் பணிகளை தொடக்கிவைத்தாா்.