முகப்பு
விழுப்புரம்

புதுவை மாநிலத்தில் 139 பேருக்கு கரோனா

 புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:48 PM
பகிர்:

 புதுச்சேரியில் மேலும் 139 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இது குறித்து புதுவை மாநில சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,019 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதுச்சேரியில் 100, காரைக்காலில் 32, ஏனாம் 5, மாஹேவில் 2 போ்களுக்கு என 139 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதன்படி, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 515 ஆக உயா்ந்துள்ளது. இதில் 18 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். 497 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.