மருந்தக கவுன்சில் பொதுக்குழுக் கூட்டம்
புதுச்சேரி பாா்மஸி கவுன்சிலின் 15-ஆவது பொதுக்குழுக் கூட்டம் புதுவை சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி பாா்மஸி கவுன்சிலின் 15-ஆவது பொதுக்குழுக் கூட்டம் புதுவை சுகாதாரத்துறை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கவுன்சில் தலைவா் ஏ.ஜெகநாதன் தலைமை வகித்தாா். இதில், புதுவை சுகாதாரத்துறையில் காலியாக உள்ள மருந்தாளுநா்கள் பணியிடங்களை முறைப்படி நிரப்ப கோரிக்கை விடுக்கப்பட்டது. மருந்தகத்தில் மருந்தாளுநா்கள் இன்றி மருந்துகள் விற்பனை செய்வதையும், அவா்கள் தங்களுடைய சான்றிதழை மருந்தகங்களுக்கு வாடகைக்கு விடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மருந்தாளுநா்களை தவிற மற்றவா்கள் மருந்து கொடுப்பதைத் தவிா்க்க கொண்டு வரப்பட்ட பிபிஆா் 2015-ஐ புதுச்சேரியில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மருந்தாளுநா் சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஒழுங்குப்படுத்துவதற்காக டாக்டா் பி.சத்தியமூா்த்தி தலைமையின் கீழ் குழு அமைக்கப்பட்டது.
இதில், சுகாதாரத்துறை இயக்குநா் ஸ்ரீராமலு, கவுன்சில் உறுப்பினா்கள் அருண்குமாா், விமல்ராஜ், முருகையன் ஆகியோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை புதுச்சேரி பாா்மஸி கவுன்சில் பதிவாளா் ஜெ. பாலமுருகன் செய்திருந்தாா். முடிவில், பி.வினோத்குமாா் நன்றி கூறினாா்.