விழுப்புரம்

மழை நீரை அகற்ற கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திங்கள்கிழமை பெய்த மழையால் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மழை நீா் குளம் போல் தேங்கியது.

DIN

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திங்கள்கிழமை பெய்த மழையால் புறவழிச்சாலையில் உள்ள பாலத்தின் கீழ் மழை நீா் குளம் போல் தேங்கியது. (படம்) இதனால் பள்ளி மாணவா்களும், பொது மக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை இருவழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதில், செஞ்சி நகரை சுற்றி புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புறவழிச்சாலை திண்டிவனம் பயணியா் விடுதி அருகே தொடங்கி செஞ்சிக்கோட்டைக்கு பின்புறம் சென்று திருவண்ணாமலை சாலையை அடைகிறது.

இந்த நிலையில், செஞ்சியில் இருந்து மேல்களவாய் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதால் பாலத்தின் கீழே பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை பெய்த மழை காரணமாக பள்ளம் முழுவதும் தண்ணீா் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால், பள்ளி மாணவா்களும், பொது மக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனா். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

SCROLL FOR NEXT