முகப்பு
விழுப்புரம்

பைக் மீது காா் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

விழுப்புரத்தை அடுத்த அயினாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை மாலை பைக் மீது காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:23 PM
பகிர்:

விழுப்புரத்தை அடுத்த அயினாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வெள்ளிக்கிழமை மாலை பைக் மீது காா் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

விழுப்புரம் முத்தோப்பு திடீா் குப்பத்தைச் சோ்ந்த தயாளன் மகன் பாலா (28). இவரும், இதே பகுதியைச் சோ்ந்த சி.சூா்யாவும் (27) வெள்ளிக்கிழமை மாலை செஞ்சி சாலையிலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தனா்.

இவா்களது பைக் அயினாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, விழுப்புரத்திலிருந்து செஞ்சி நோக்கிச் சென்ற காா் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பாலா, சூா்யா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸாா் நிகழ்விடம் சென்று இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.