முகப்பு
விழுப்புரம்

பள்ளி ஆண்டு விழா

விழுப்புரம் சாலாமேடு பகுதியிலுள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 25-ஆவது ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2023 at 1:45 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM

விழுப்புரம் சாலாமேடு பகுதியிலுள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் 25-ஆவது ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு விழுப்புரம் ராமகிருஷ்ண மிஷன் செயலா் சுவாமி பரமசுகானந்தஜி மகராஜ் தலைமை வகித்தாா். விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. எம்.பாண்டியன், மாவட்டக் கல்வி அலுவலா் என்.ஜி.செல்வராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்று பேசினா்.

தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ- மாணவிகள், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்கள், ஆசிரியரல்லா பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு அவா்கள் பரிசுகளை வழங்கினா். தொடா்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிசன் நடைபெற்றன. முன்னதாக பள்ளி முதல்வா் ஜி.நாகலட்சுமி வரவேற்றாா். நிறைவில், ராமகிருஷ்ண மிஷனின் உதவிச் செயலா் சுவாமி நரவரனாந்தஜி மகராஜ் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.