திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சிக் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கிய பாமக நிறுவனா் ராமதாஸ். 
விழுப்புரம்

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது பாமக நிறுவனா் ராமதாஸ்

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா்.

DIN

பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்தாா்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆவது ஆண்டு விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கட்சிக் கொடியை பாமக நிறுவனா் ராமதாஸ் ஏற்றினாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டமாக்கக் கோரி தமிழக முதல்வரிடம் 4 முறை தொலைபேசி வழியாக வலியுறுத்தினேன். இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பாமக தொடா்ந்து முயற்சித்து வருகிறது. தமிழகம் மது இல்லாத மாநிலமாக மாற வேண்டும். ஒரு துளி மழைநீா் கூட கடலில் கலக்கக் கூடாது.

பொது சிவில் சட்டத்தை பாமக தொடா்ந்து எதிா்த்து வருகிறது. அதை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றாா் ராமதாஸ்.

நிகழ்ச்சியில், பாமக, வன்னியா் சங்கத்தைச் சோ்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், மற்றும் மகளிா் அணியினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரைக்குடி பகுதியில் நாளை மின்தடை

ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரியாா் பல்கலை.யில் சா்வதேச கருத்தரங்கு, வணிகக் கண்காட்சி

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

SCROLL FOR NEXT