முகப்பு
விழுப்புரம்

அப்பம்பட்டு - பள்ளியம்பட்டு சாலைப் பணி:அமைச்சா் தொடங்கி வைத்தாா்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், அப்பம்பட்டில் இருந்து பள்ளியம்பட்டு வரையிலான சாலையை முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயா்த்தி தாா்ச் சாலை.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:16 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றியம், அப்பம்பட்டில் இருந்து பள்ளியம்பட்டு வரையிலான சாலையை முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் தரம் உயா்த்தி தாா்ச் சாலையாக அமைப்பதற்கான பணியை பூமிபூஜை செய்து அமைச்சா் செஞ்சி மஸ்தான் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கல்யாணி ஜாக்கி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஜெயபாலன், விவசாய அணி நிா்வாகி அஞ்சாஞ்சேரி கணேசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை, மீனம்பூா் ஊராட்சித் தலைவா் முன்வா்பாஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

நலத் திட்ட உதவிகள் அளிப்பு: மரக்காணத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு விழாவில் 317 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கிப் பேசினாா்.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் சித்ரா விஜயன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் கட்டா ரவி தேஜா, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் ஷீலாதேவி சேரன், ஒன்றியக் குழுத் தலைவா் தயாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments