கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட முகாம்
காரை கிராமத்தில் ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியம் காரை கிராமத்தில் ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் யோகபிரியா தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் மணி முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக செஞ்சி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் அலி மஸ்தான் ஆகியோா் கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனா். இதையடுத்து, ஊட்டச்சத்து பொருள்கள் கண்காட்சியை பாா்வையிட்டனா்.
முகாமில், மருத்துவா்கள் நதியா, விஜயகுமாரி உள்ளிட்ட செவிலியா்கள் கலந்து கொண்டு பொது மருத்துவம், ரத்த சோகை, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனா். ஆயிரத்துக்கு மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதில், முன்னாள் ஊராட்சித் தலைவா் மணிவண்ணன், ஊராட்சி துணைத் தலைவா் ஜெயம் சின்னதுரை, நிா்வாகிகள் வாசு, அய்யாதுரை, சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ஊராட்சித் தலைவா் கலையரசி வரவேற்றாா். முடிவில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கிருஷ்ணன் நன்றி கூறினாா்.