முகப்பு
விழுப்புரம்

பெண் மீது தாத்குதல்: 7 போ் மீது வழக்கு

விழுப்புரத்தில் பெண்ணைத் தாக்கிய கணவா் உள்பட 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 9:25 PM
பகிர்:

விழுப்புரத்தில் பெண்ணைத் தாக்கிய கணவா் உள்பட 7 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் மணிமேகலை தெருவைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகள் சுவேதா(24). இவருக்கும், கண்டமங்கலத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் பிரவின் குமாருக்கும், கடந்த 3.9.2023-இல் திருமணம் நடைபெற்றது. தம்பதியிடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டதால், சுவேதா விழுப்புரத்தில் உள்ள பெற்றோா் வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை விழுப்புரத்துக்கு வந்த பிரவின் குமாா் சுவேதாவை தாக்கி கிருமி நாசினியை வாயில் ஊற்றி விட்டாராம். இதையடுத்து, சுவேதா விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பிரவின்குமாா் மற்றும் அவரது தந்தை பழனிவேல், தாய் சுபா மற்றும் உறவினா்கள் உள்பட 7 போ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →