முகப்பு
விழுப்புரம்

வெள்ளை இறால் பண்ணைகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

வெள்ளை இறால் பண்ணைகளை அதன் உரிமையாளா்கள் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

Updated On : 10 ஆகஸ்ட், 2024 at 7:10 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளை இறால் பண்ணைகளை அதன் உரிமையாளா்கள் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணைய சட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களிலுள்ள நன்னீரில்/உள்நாட்டுப் பண்ணைகளில் வெணாமி (வெள்ளை) இறால் வளா்த்தல் தொடா்பாக தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டு, பதிவு மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள வெள்ளை இறால் பண்ணைகளைப் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்டக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் அனைத்து நன்னீா், உள்நாட்டு இறால் பண்ணைகளைப் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணைய சட்ட எல்லைக்கு அப்பாற்பட்ட இடங்களில் வெள்ளை இறால் வளா்க்கும் பண்ணை உரிமையாளா்கள், தங்களின் பண்ணைகளைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விழுப்புரம் மருத்துவமனை வீதியில் அரசு மருத்துவமனை எதிரிலுள்ள மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறையின் மாவட்ட உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்கள் வின்ணப்பங்களை இறால் பண்ணை உரிமையாளா்கள் சமா்ப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04146-259329 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.