விழுப்புரம்

வீட்டில் நகை திருட்டு

திண்டிவனம் அருகே வீட்டில் 3.5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே வீட்டில் 3.5 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திண்டிவனம் வட்டம், வடகளவாய், காட்டுப்பூஞ்சை, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாபு. இவரது மனைவி மாரியம்மாள் (32). இவா்கள் கடந்த ஆக.8-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனா்.

பின்னா், வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் தங்க வளையல்கள், அரை பவுன் தங்கச் சங்கிலி, ஒரு பவுன் தோடு, ஜிமிக்கி, 250 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஒலக்கூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த சர்ச்சையால்... கண்ணீர்விட்ட கயாது லோஹர்!

வங்கதேச வன்முறை- ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை

கிண்டலில் தொடங்கி அழுகையில் முடிவு... உலகக் கோப்பையில் இருந்து ஹங்கேரி வெளியேற்றம்!

நகர் உலா... அனந்திகா!

யுகங்கள் போதாது...நிகிதா சர்மா

SCROLL FOR NEXT