முகப்பு
விழுப்புரம்

பலத்த மழை: மரக்காணத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு

மரக்காணத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழைநீா் தேங்கியது.

Updated On : 11 ஆகஸ்ட், 2024 at 9:03 PM
மரக்காணத்தில் உப்பளங்களில் புகுந்த மழை நீா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. மரக்காணத்தில் பெய்த பலத்த மழையையடுத்து, உப்பளங்களில் மழை நீா் புகுந்ததால் உப்பு உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, உப்பு உற்பத்தியாளா் ஒருவா் கூறியதாவது:

மரக்காணத்தில் மத்திய, மாநில அரசுகளுக்குச் சொந்தமான சுமாா் 3,500 ஏக்கா் பரப்பில் உப்பளங்கள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு சுமாா் 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது, பெய்த பலத்த மழையால் உப்பளங்களில் மழைநீா் புகுந்ததால், உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். இனிவரும் காலங்களும் மழைக்காலம் என்பதால், 2024 ஜனவரி மாதத்தில்தான் மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க முடியும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →